முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரூர் அரசு கலைஅறிவியியல் கல்லூரியில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை வருவாய் கோட்டாச்சியர் வில்சன் ராஜசேகர், பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால், துணை தலைவர் சூர்யா தனபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா, வனிதா கிருஷ்ணகுமார், திமுக நகர செயலாளர் முல்லைரவி, மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், பி.வி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக