Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய MP.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கவிதை, ஓவியம், பேச்சு, கிராமிய கலைக்குழுபோட்டி, மொபைல் போட்டோகிராபி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.S.செந்தில்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார், கவிதை, ஓவியம், மொபைல் போட்டோகிராபி, கிராமிய கலைக்குழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடம் பெறும் தனிநபர் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசு பெற்றவர் உட்பட மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதியுடையவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies