மருத்துவக்குழுவின் மேற்பார்வையில், இந்த முகாம் மிகவும் ஒழுங்காகவும் சீராகவும் நடைபெற்றது. இதன் மூலம் தருமபுரி மற்றும் அரூர் அரசு மருத்துவமனைக்கு மொத்தமாக 28 அலகுகள் குருதி வழங்கப்பட்டது. இரத்ததானம் செய்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த முகாமின் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் ரவி மற்றும் திலீபன் ஆகியோர் பங்கேற்று முக்கியப் பங்காற்றினர்.
இம்முகாமில் அரிமா மு.ப.செந்தில்நாதன் குருதிக் கொடை பாசறை மாநில செயலாளர், இரா.வெள்ளிங்கிரி மாநில ஒருங்கிணைப்பாளர், அரூர் நாம் தமிழர் கட்சி முன்னிலையில், இந்நிகழ்வை மா.சதீஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் குருதிக் கொடை பாசறை தருமபுரி அவர்கள் நுட்பமாக ஒருங்கிணைந்தனர். சமூக நலத்தையும், மனித நேயத்தையும் முன்னேற்றும் முகாம், இளைஞர்களிடையே சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு சீரிய முயற்சி என பாராட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக