Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளியில் நான்காண்டு சாதனைகள் விளக்கும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி – திமுக பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது.


பாலக்கோடு, மே 25 –

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில், திமுக பேரூர் கழகம் சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்த விளக்க புத்தகம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, பேரூர் செயலாளர் மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் திரு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.


மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. M.R.K. பன்னீர் செல்வம் அவர்களின் ஆலோசனை மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. பழனியப்பன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


மாரண்டஅள்ளி பேருந்து நிலையம், நான்குரோடு, கடைவீதி, சந்தை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் "நாடு போற்றும் நான்காண்டு – தொடரட்டும் இது பல்லாண்டு" என்ற தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


இதில் மகளிர் உரிமைத்தொகை, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களும், அரசின் செயல்பாடுகள் பற்றிய முழுமையான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணகுமார், கிளை கழக செயலாளர்கள் வரதராஜ், வைதீஷ், வாக்குசாவடி முகவர் சந்திரன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் வசீம், நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மோகன், குமார், சரவணன், வையாபுரி, மூர்த்தி, அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பொதுமக்களிடம் நேரடியாக சென்று அரசு நடவடிக்கைகளை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies