தருமபுரி, மே 24-
தருமபுரி மாவட்டம் முகமது அலி கிளப் ரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகம் 2-வது மாடியில் செயல்பட்டு வரும் விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி. அகாடமி மையத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் ஊக்கமளிக்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் தலைமையிலிருந்தார். அவருடன் தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குநர்கள் பிரேம் மற்றும் சினேகா பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அகாடமியின் மூத்த முதல்வர் எஸ். நாராயணமூர்த்தி வரவேற்று நடத்தினார்.
பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் எஸ். மாதேஸ்வரன், நிகழ்வின் முக்கிய அம்சமாக, அண்மையில் தேர்வில் வெற்றிபெற்ற சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். இதில், விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி. அகாடமியில் பயிற்சி பெற்று, தற்போதைய பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2-ஏ தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பெற்ற ஜனா நந்தன் சிறப்பாக பேசினார்.
அத்துடன், குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 18-வது இடத்தைப் பிடித்த முத்துக்குமரன், மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் வெற்றி பெற்ற சாபித் அலி, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்ற கோகுல்குமார் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்ததோடு, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை, சுய ஒழுக்கம், திட்டமிடல், மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவம் குறித்து வழிகாட்டும் வகையில் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் பேசும் போதே, கல்வி நிறுவனத் தலைவர் டி.என்.சி. இளங்கோவன், “விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி. அகாடமி மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு மட்டுமின்றி, விரைவில் ஐ.ஏ.எஸ்., பேங்கிங் மற்றும் ரெயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முடிவில், பயிற்சி மாணவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில், பயிற்சியாளர் ஷேக் தாவூத் நன்றியுரையாற்றி நிகழ்வை நிறைவு செய்தார். இந்த நிகழ்வு, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் முகமாக இருந்ததோடு, வெற்றி பெற்றவர்களின் நேரடி அனுபவங்கள், மற்ற பயிற்சி மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.
Source : Social Media.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக