மொரப்பூர் - அக்ரஹாரம் பெரமாண்டப்பட்டி மேம்பால தூய்மை பணி மேற்கொண்ட சமூக ஆர்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

மொரப்பூர் - அக்ரஹாரம் பெரமாண்டப்பட்டி மேம்பால தூய்மை பணி மேற்கொண்ட சமூக ஆர்வலர்கள்.


தர்மபுரி: மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ரஹாரம் பெரமாண்டப்பட்டி இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் மளிகை கடை மற்றும் அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற குழு மாணவர்கள் இணைந்தனர்.

இந்த தூய்மை பணியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த பாட்டில்கள், முற்பூதல்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழலை சுத்தமாக்கினர். அவர்களின் சமூகப் பணியை காணும் வாகன ஓட்டிகள் அவர்களை வெகுவாக பாராட்டினர்.


பணி முடிந்ததும், மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கி ஜெகநாதன் அவர்கள் வாழ்த்தினார். மேலும், மாணவர்கள் இதுபோன்ற சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதுபோன்ற செயல்கள் பொதுமக்களில் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

Post Top Ad