தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில், காரை அப்புறப்படுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரி ஒருவரை தாக்கி, சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி நத்தக்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் சகி. இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாவார். அவரது மகன் அஸ்ஸலாம், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 15ம் தேதி இரவு, மகனை பார்ப்பதற்காக சகி பொம்மிடிக்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்தக் காரை அங்கிருந்து எடுக்கும்படி சகி கேட்டபோது, அதே பகுதியில் வசிக்கும் சிபி சக்ரவர்த்தி மற்றும் சச்சின் குமார் ஆகிய இருவரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு தீவிரமாகி, அவர்கள் சகியை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் தாக்கி காயப்படுத்தினர். பின்னர், சகியின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதனை அப்பகுதியில் வழியாக வந்த பொதுமக்கள் கண்டு, உடனடியாக சகியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை முடிந்து வந்த சகி, இன்று பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சிபி சக்ரவர்த்தி மற்றும் சச்சின் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக