அரூரில் ஜமாபந்தி நிகழ்ச்சி: 411 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

அரூரில் ஜமாபந்தி நிகழ்ச்சி: 411 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


அரூர், மே 20-

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில், அரூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு/இறப்பு சான்றுகள், குடும்ப அட்டை, சாதி, வருமான, முதல் பட்டதாரி மற்றும் இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 411 மனுக்கள் பெறப்பட்டன.


மனுக்களை நேரில் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அவற்றை விரைந்து ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் பதிவேடுகள், வருவாய்த் துறை ஆவணங்கள் மற்றும் நில அளவை கருவிகளை ஆய்வு செய்தார்.


இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நில அளவை) திரு. செந்தில்குமார், மாவட்ட மேலாளர் திரு. அருண் பிரசாந்த், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. செம்மலை, அரூர் வட்டாட்சியர் திரு. பெருமாள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad