கம்பைநல்லூர், மே 11:
அரூர் சட்டமன்ற தொகுதி கம்பைநல்லூர் பேரூராட்சியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தருமபுரி மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் MLA தலைமை வகித்தார்.
இந்த பிரச்சார நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான எஸ்.ஆர். வெற்றிவேல், அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார MLA, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி MLA, கூட்டுறவு ஒன்றிய தலைவர் M. பொண்ணுவேல், மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கழகத்தின் திட்டங்களை விளக்கியனர். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி, கழகத்தின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை உரையாடலாக கொண்டு சென்றதோடு, திரளான மக்களை ஈர்த்ததற்காக சிறப்பாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக