தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி மற்றும் ஏரியூர் ஆகிய இடங்களில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் பாப்பாரப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் முகாமை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் இருதய நோய் சம்பந்தமான பரிசோதனை, எலும்பு முறிவு, கொரோனாபரிசோதனை, கண் சம்பந்தமான பரிசோதனை, மற்றும் புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. இதில் பாப்பாரப்பட்டி, பிக்கிலி, ஆலமரத்துப்பட்டி, மாக்கனூர் பள்ளிப்பட்டி, போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட சிறியவர் பெரியவர் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.
இதில் மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக