அரூர், மே 19-
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை நல்லாசிரியர் அவர்கள், கடந்த 29 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக சேவை புரிந்து வருவதையடுத்து, உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த முப்பெரும் விழா திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதே இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 300 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
விழாவில் மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை, மாநில தலைவர் தேவி செல்வம், மாநில பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையிலாக பங்கேற்றனர். கமாண்டர் பேரிடை மீட்புப் படை SLT ஈசன் முன்னிலையில், பழனிதுரை நல்லாசிரியர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழா சிறப்பாக நடைபெற, பல்வேறு கல்வி மற்றும் உடற்கல்வி துறையினரின் ஒத்துழைப்பு கிடைத்தது.
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பழனிதுரை ஆசிரியர், தன்னிச்சையாகவும் அர்ப்பணிப்போடு மாணவர்களின் உடல் நலன் மற்றும் ஒழுக்கக் கல்வியில் முக்கிய பங்காற்றியவர் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தெரிவித்தார். ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள் என பலரும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 25 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையில் தன்னலம் பாராது சேவை புரிந்த இவரைப் போன்ற ஆசிரியர்கள் இன்றைய சமூகத்திற்குத் தேவையான நெறி காட்டிகள் என பாராட்டுக்குரியோர் மத்தியில் உயர்ந்த இடம் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக