தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்தில் அமைந்துள்ள பொம்மிடி பேருந்துநிலையத்தில், வணிக வளாகத்தில் உள்ள சில கடைகாரர்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து தங்களுடைய பொருட்களைத் வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, அங்கு வரும் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நிற்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
சில பொதுமக்கள் இந்த குறையை கடைக்காரரிடம் எழுப்பும்போது, “பேரூராட்சி நிர்வாகத்துக்கு கூடுதலாக பணம் செலுத்துகிறோம்” எனக் கூறி மிரட்டும் நிலை உருவாகியுள்ளது. இது மேலும் பொதுமக்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
“பொது மக்களுக்கு பயன்படும் இடங்களை சிலர் தனிப்பயனுக்காக ஆக்கிரமித்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் பயணிகள் பாதுகாப்பு, நலன் ஆகியவை கேள்விக்குறியாகும்,”
என தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனபதே அனைவரின் கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக