தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொய்யப்பட்டி கிராமத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ சம்பத்குமார் தலைமையில் பொய்யப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

பொய்யப்பட்டி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொய்ப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்மலர் பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர்ஆர் பசுபதி கட்சி நிர்வாகிகள் அதிமுக கட்சி தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.