Type Here to Get Search Results !

பாலக்கோடு கடைவீதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என துண்டு பிரச்சாரம்.


பாலக்கோடு, ஜூலை 12-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு  கடைவீதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் பிரச்சாரம் வட்டார தலைவர் கணேசன்  தலைமையில் நடந்தது. பிரச்சாரத்தில் நகர துணைத் தலைவர் பாலாஜிகுமார்  முன்னிலை வகித்தார். 


மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி தீர்த்தராமன் கலந்து கொண்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பேருந்து‌ நிலையத்திலிருந்து  கடைவீதி வழியாக தக்காளிமண்டி வரை சென்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் ராகுல் காந்தியின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற‌ போராட்டத்தை ஆதரிக்க கேட்டுக் கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies