பென்னாகரம், ஜூலை – 5 (ஆனி 21):
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம், செல்போன் கடை, பழக்கடை மற்றும் அரசு அலுவலகம் முன்பு லாட்டரி விற்பனை நடைபெறுவதாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியையடுத்து போலீசார் சோதனை மற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தகவலின் அடிப்படையில், இன்று (05.07.2025), பென்னாகரம் 500 அலுவலகம் அருகே சில்லரை லாட்டரி விற்பனை செய்த சேகர் த/பெ. ராஜு (கிருஷ்ணாபுரம்) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் குற்ற எண்: 186/2025 என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக லாட்டரி விற்பனை குறித்த புகார்களை பொதுமக்கள் 9400101065 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும், புகார் வழங்குநரின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.