பாலக்கோடு, ஜூலை 9 (ஆனி 24)
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்படும் தக்காளி மார்க்கெட்டில் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு, புலிகரை, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் தக்காளிகளை, மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
தக்காளி விளைச்சல் தற்போது குறைந்துள்ளதால், ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாக, 15 கிலோ கூடை ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.450 வரை விலை சென்றுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையாவதாக தெரியவந்துள்ளது. திடீரென ஏற்பட்ட விலை உயர்வால், தக்காளி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். வரத்து மேலும் குறைந்தால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.