பென்னாகரம், ஜூலை 2 (ஆனி 18):
நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் முனைவர் மா. பாரதி, கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் இரா. சங்கர் (மு.கூ.பொ) அவர்கள் தலைமையேற்று, மாணவர்கள் வாழ்க்கையை வளமடையச் செய்வதற்கு இளமையில் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிப்பு போன்ற அறிவார்ந்த பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உரையில் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வழக்கறிஞர் திருமதி மு.பெ. சுதா, பி.ஏ., பி.எல்., மாணவர்களுக்கு போக்சோ சட்டம், மனித உரிமைகள், பெண் பாதுகாப்பு மற்றும் பெண் சுகாதாரம் போன்ற முக்கியமான சட்ட விழிப்புணர்வுகளை விளக்கினார். மாணவர்கள் எந்தவிதமான சட்டசிக்கலிலும் இடம் பெறாதவாறு கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பின்னர், கவிஞர் இளந்தென்றல் சரவணன் அவர்கள் தன்னுடைய கவிதை வரிகளின் மூலமாக மாணவர்களின் ஒழுக்கம், பண்பாடு, கல்வி வளர்ச்சி குறித்துப் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பா. கதிர்வேல் அவர்கள் கல்லூரியில் செயல்படும் மன்றங்களைப் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, விடுதி காப்பாளர் திரு வேலு அவர்கள் மாணவர் சேர்க்கை மற்றும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்வின் இறுதியில், முனைவர் க. கண்ணுச்சாமி, வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நன்றியுரையுடன் நிகழ்ச்சியை முடித்தார்.