காரிமங்கலம், ஆகஸ்ட் 19:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொது தகவல் அலுவலர் மீது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட தூண்கள் இயக்கம் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலர் சென்றது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் பிரிவு 2(j)-ன் கீழ், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சம்பந்தப்பட்ட பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் கோப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மறு தேதி நிர்ணயித்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை ஆய்வு செய்யும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்
சட்டப்படி தகவல்களைப் பெறும் உரிமையும், அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவுகள் மற்றும் ஆவணங்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் பொதுமக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சட்ட தூண்கள் இயக்கத்தின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவை சட்ட தூண்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் P.K. சிவா, மாநிலத் துணைச் செயலாளர் S.P. நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் பா. கணேஷ், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் M. கௌதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S.P. முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் ரகுபதி, அறங்காவலர் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.
மேலும், சட்ட தூண்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)