Type Here to Get Search Results !

பாலக்கோடு காவல் நிலையத்தில் 80வது சுதந்திர தின விழா – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


பாலக்கோடு, ஆக.15:
 


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பாலக்கோடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. சுப்பிரமணியம் அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து நிலை காவலர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.


சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காவல் துறையினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தேசப்பற்று மற்றும் பொதுமக்கள்–காவல்துறை நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies