Type Here to Get Search Results !

ஆதரவற்றோருக்கு உறவாகும் ‘மை தருமபுரி’ – 236 உடல்களை நல்லடக்கம் செய்த சேவைக்கு பாராட்டு.


தருமபுரி, ஆக. 19:
 


கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் மை தருமபுரி அறக்கட்டளை, ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் சேவைக்காக பாராட்டு மற்றும் கௌரவத்தை பெற்றுள்ளது. மை தருமபுரி அறக்கட்டளை சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல், ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தங்களது உறவினர்களாக கருதி, உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனிதநேய சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 5 பச்சிளம் குழந்தைகள் உட்பட 236 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி ஜோதி மஹாலில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில், மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவையை பாராட்டி ஜீவா நிகழ்ச்சிக் குழுவினர் மற்றும் ஸ்ரீ மியூசிக் அகாடமி சார்பில் கௌரவிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்கள் நவீன், மைனா நந்தினி, விளாசினி, சூப்பர் சிங்கர் தான்யா ஸ்ரீ, சிபி ஸ்ரீநிவாசன், பிரதீப் நிவாஸ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.


மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா மற்றும் அமைப்பாளர்களான செந்தில், சண்முகம், கிருஷ்ணன், சையத் ஜாபர், கணேஷ், அலெக்சாண்டர் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். ஆதரவற்ற நிலையில் உயிரிழக்கும் நபர்களுக்கு இறுதி நேரத்தில் உறவாக இருந்து, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் இந்த மனிதநேயப் பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.


“ஆதரவற்றோருக்கு உறவாய்” என்ற நோக்கத்துடன் மை தருமபுரி அறக்கட்டளையின் மனிதநேய சேவைப் பயணம் தொடர்ந்து நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies