பாலக்கோடு, ஆக.15 :
மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மகாகவி பாரதியார் TNHB குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் திரு. சரவணன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலக்கோடு தீயணைப்புத் துறையின் சிறப்பு நிலை அலுவலர் திரு. மகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் தேசியக் கொடியின் வரலாறு குறித்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி பாடல் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டு, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் மகாகவி பாரதியார் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் திரு. கணேசன், துணைத் தலைவர் திருமதி. அம்மாசியம்மாள், துணைச் செயலாளர் திரு. லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், சட்ட தூண் மாவட்ட தலைவர் பி.கே. சிவா, த.வெ.க. பாலக்கோடு நிர்வாகி சபரி பிரகாஷ், கமலேஷ், இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன், ரகுபதி, வாசுதேவன், சிவசங்கரன், முனியப்பன், கௌதம், காவேரி, அயூப், வெங்கடேசன், சரஸ்வதி உள்ளிட்டோர், மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் குடியிருப்புப் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தேசப்பற்று மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா, குடியிருப்புப் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.
.gif)

.jpg)