Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா – தியாகிகளுக்கு மரியாதை.


பாலக்கோடு, ஆக.15:
 


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து பேசினார். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். மேலும், விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தேசப்பற்று மற்றும் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies