Type Here to Get Search Results !

தருமபுரி அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் களைகட்டின.


தருமபுரி, ஆகஸ்ட் 16:
 


தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன், பொருளாளர் நாட்டான் மாது, உறுப்பினர்கள் வெல்டிங் ராஜா, டி.ஏ. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் சார்பில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.


மாணவிகளிடையே தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா, பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies