தருமபுரி, ஆக.19:
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் தருமபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளராக அறிவிக்கப்பட்ட கே.ஆர். சந்திரன், தருமபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் டாக்டர் ஆர். அசோகனை மாவட்ட தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, மாவட்ட கழகச் செயலாளர் டாக்டர் ஆர். அசோகனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.சி. பழனி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள கே.ஆர். சந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
.gif)

.jpg)