பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையொட்டி நடைபெற்ற இணைப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், கோவிந்தசாமிக்கு பூங்கொத்து வழங்கி கட்சியில் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு கோவிந்தசாமியை வரவேற்றனர். இந்த இணைப்பு விழாவில் கட்சியின் அமைச்சர்கள் வெங்கட்ராமன், ஆதவ் அர்ஜுன் மற்றும் மரிய வில்சன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இந்த அரசியல் நகர்வு, தருமபுரி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)