Type Here to Get Search Results !

தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் கோலாகலம்.


தருமபுரி, ஜூலை 21:


தருமபுரி நகரம் எஸ்.வி. ரோட்டில் உள்ள குப்பையன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண வைபவம் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் சார்பில் வளையல், மாங்கல்ய கயிறு, குங்குமம், மஞ்சள், விபூதி, பழங்கள், வெல்லம், வறுக்கடலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.


பின்னர் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா நிறைவில் கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies