Type Here to Get Search Results !

+2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பங்கேற்பு.


தருமபுரி, ஜூன் 6:


தருமபுரியில் பசுமை தாயகம் சார்பில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி குண்டலப்பட்டியில் உள்ள பச்சைமுத்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பச்சைமுத்து கல்விக் குழுமத் தலைவர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, பசுமை தாயகம் தலைவர் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய சௌமியா அன்புமணி, ஆண்டுதோறும் சுமார் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். அதில் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெறுகின்றனர். உயர்கல்வி தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி போன்ற உயரிய இலக்குகளை நோக்கி பயணிக்க விரும்புகின்றனர் என்றார்.


மேலும், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவர்களாக வெளிவருகின்றனர். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்விக்கான இடங்கள் அதிகரித்து வரும் நிலையில், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்ட மாணவர்கள் அதிக அளவில் பயனடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதேபோல், ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்புகளை முடித்து வருவதாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக அளவிலான மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருவதாகவும் தெரிவித்தார். மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவற்றை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பாரதியார் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டுதல் துறைத் தலைவர் முனைவர் விமலா, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் வெள்ளங்கிரி, பயிற்சி திட்ட உதவி இயக்குநர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.


மேலும், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies