Type Here to Get Search Results !

மேளம், தாளத்துடன் பள்ளிக்கு அழைத்து வந்த பழங்குடியினர்: புதிய கல்வியாண்டை உற்சாகமாக வரவேற்ற சித்தேரி மலை கிராம மக்கள்


அரூர், ஜூன் 5:


2026-27 கல்வியாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் சேரும் மாணவர்களை மேளம், தாளம் முழங்க சிறப்பாக வரவேற்று பள்ளிக்கு அழைத்து வந்த சித்தேரி மலை கிராம மக்களின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


அரூர் அருகே உள்ள சித்தேரி மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், புதிய கல்வியாண்டில் பள்ளியில் சேரும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாரம்பரிய முறையில் மேளம், தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள், சீர்வரிசை பொருட்களுடன் பள்ளி வாகனத்தை அலங்கரித்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தினர்.


பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்விப் பயணத்தை தொடங்கினர். பழங்குடியினர் சமூகத்தில் கல்வி மீதான விழிப்புணர்வு அதிகரித்து வருவதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies