Type Here to Get Search Results !

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: ஆதார், ரேஷன் கார்டு இணைக்காவிட்டால் வாக்களிக்கும் உரிமை ரத்து.


பாப்பிரெட்டிப்பட்டி, மே.26:


சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழு தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளராக இருக்க, அங்கத்தினர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை விவரங்களை வழங்காத அங்கத்தினர்கள் தங்களது அங்கத்தினர் எண், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணின் நகல்களுடன் 10 நாட்களுக்குள் தங்கள் பகுதி கரும்பு கோட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால், அங்கத்தினர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறந்த அங்கத்தினர்களின் வாரிசுதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பங்கு மாற்றம் செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதற்காக ஆலைப்பகுதி, அரூர் வடக்கு, அரூர் தெற்கு, மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் தீர்த்தமலை பகுதிகளுக்கான கரும்பு அலுவலர்களின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலை சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் செயலாட்சியர் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies