Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.


தருமபுரி, மே.25:


தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2026–2027 கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக இயக்குநர் (பொ) முனைவர் எம். செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் M.A. ஆங்கிலம், MBA., M.Com., M.Sc. கணிதவியல், M.Sc. இயற்பியல், M.Sc. கணினி அறிவியல், M.Sc. உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் M.Sc. புவியமைப்பியல் உள்ளிட்ட 8 முதுநிலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.


மேலும், மேற்கண்ட பாடப்பிரிவுகளில் முனைவர் பட்ட (Ph.D.) ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள், தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகள், தொழில்முறை பயணங்கள், NET / SET / GATE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.


2026–2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகள் பெரியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள “PG Extension Centre Admission 2026-2027 Online Application” என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து,

இயக்குனர் (பொ),
பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்,
தருமபுரி – 635205

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04342-266399 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies