தருமபுரி – ஏப்ரல் 11:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், டி. துறிஞ்சிப்பட்டி, லலித்தானூர், கொண்டம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தொகுதிக்குட்பட்ட 48 கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, திமுக அரசின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி பல முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும், மீட்டர் பொருத்தாமல் நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினார். இந்த பிரச்சாரத்தின் போது ஒன்றிய செயலாளர் மாது, வேடியப்பன், வெற்றி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

