தருமபுரி – ஏப்ரல் 11:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி மற்றும் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “என்னை வெற்றி பெறச் செய்தால் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு வாய்ப்பு அளித்தால் உயிர் உள்ளவரை உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து சேவை செய்வேன்” என உறுதியளித்தார்.
மேலும், தருமபுரி தொகுதியின் வளர்ச்சிக்காக முரசு சின்னத்தில் வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் டி.ஏ. காவேரி, கௌதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)