Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; ஆகஸ்ட் 8 பணி நாள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜூலை 28:


தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் திருவிழாவையொட்டி, ஆடி 18-ஆம் நாளான 2026 ஆகஸ்ட் 3 (திங்கட்கிழமை) தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் திருத்திய உள்ளூர் விடுமுறை பட்டியலின்படி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.


இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2026 ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை Negotiable Instruments Act, 1881-ன் கீழ் அறிவிக்கப்படாததால், அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மற்றும் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies