Type Here to Get Search Results !

தருமபுரி மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற இணையவழி விண்ணப்பம்; மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, ஜூலை 28:


தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 2026–2027 கல்வியாண்டில் உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெறும் நடைமுறை முழுமையாக இணையவழியில் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.


அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், மருத்துவம், செவிலியர், தொழிற்பயிற்சி (ITI) உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேரும் தகுதியுள்ள மாணவர்கள், மத்திய அரசின் PM Vidyalakshmi Portal (www.pmvidyalakshmi.co.in) மூலம் மட்டுமே கல்விக் கடனுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்:

  • மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார் மற்றும் PAN அட்டை நகல்கள்
  • கல்லூரி அடையாள அட்டை
  • 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • மாற்றுச் சான்றிதழ் (TC)
  • கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதம் மற்றும் கட்டண விவரப் பட்டியல்
  • அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்திருந்தால் தற்காலிக சேர்க்கை ஆணை
  • வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்
  • தேவையெனில் பெற்றோரின் வருமான வரி தாக்கல் (ITR) மற்றும் வணிகச் சான்று
  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்கள்


விண்ணப்ப நடைமுறை

வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை மாணவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டு, தகுதியின் அடிப்படையில் விரைந்து பரிசீலிக்கப்படும்.


கல்விக் கடன் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மையம் (சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி) அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் 8925533941, 8985533942 மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 8248437853 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி PM Vidyalakshmi Portal (www.pmvidyalakshmi.co.in) மூலம் உடனடியாக கல்விக் கடனுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies