Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்; அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.


தருமபுரி – ஏப்ரல் 13:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் இன்று கடத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், பசுவாபுரம் மற்றும் தாளநத்தம் ஊராட்சிகளில் காலை முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாகமாக வரவேற்றனர்.


பரப்புரையின் போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் மகளிர் உரிமைத்தொகை, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், தாளநத்தம் பகுதியில் விவசாயிகளின் பாசன நீர் தேவைகள் மற்றும் பசுவாபுரம் பகுதியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், வெற்றி பெற்ற பின் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கடத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies