Type Here to Get Search Results !

அஞ்சல் வாக்குகள் திருச்சி மையத்திற்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


தருமபுரி – ஏப்ரல் 12:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை திருச்சி மையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்து, பிற மாவட்டங்களில் பணிபுரிந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த அஞ்சல் வாக்குகள் திருச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து வரும் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அவர்கள் தங்களது தொகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அஞ்சல் வாக்குகளை வழங்குவார்கள்.


இப்பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், தேர்தல் பணிகள் முறையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. ஏ. பாலசுந்தரம், தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies