தருமபுரி – ஏப்ரல் 13:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உழவர் சந்தை, குமாரசாமிபேட்டை, அண்ணா நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “காவேரி ஆற்றில் கடலில் கலக்கும் உபரி நீரை மோட்டார் வசதி மூலம் ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிப்காட் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம். தருமபுரி–மொரப்பூர் ரயில்வே திட்டத்தை விரைவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்” என வாக்குறுதி அளித்தார்.
இந்த பிரச்சாரத்தில் பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன், அமமுக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)