Type Here to Get Search Results !

நீட் தேர்வு சோகத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.


பாலக்கோடு, ஜூன் 22:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நீட் மறு தேர்வை எதிர்கொண்ட மன உளைச்சலால் உயிரிழந்ததாக கூறப்படும் மாணவி ரோஷ்ணியின் குடும்பத்தினரை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பாலக்கோடு அருகே உள்ள என்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ரோஷ்ணி (18), நீட் மறு தேர்வை எழுத இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், திமுக மாநில மாணவரணி செயலாளர் திருமதி வீரமணி மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் ஆகியோர், மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது மாணவியின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்று, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.


இந்த நிகழ்வில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, பேரூராட்சி தலைவர்கள் மனோகரன், முரளி, வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், வழக்கறிஞர் கோபால், பஞ்சப்பள்ளி அன்பழகன், கண்ணபெருமாள், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies