Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு; உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.


தருமபுரி – ஏப்ரல் 11:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம், ஆலாபுரம் ஊராட்சி பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பரப்புரையின் போது கோபாலபுரம் மற்றும் ஆலாபுரம் எல்லைப் பகுதிகளுக்கு வந்த வேட்பாளரை மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக வரவேற்றனர்.


வழிநெடுகிலும் கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாற்றிய வேட்பாளர் பழனியப்பன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக கல்வித்துறையில் வழங்கப்படும் முன்னுரிமை மற்றும் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை எடுத்துக்காட்டாகக் கூறினார்.


மேலும், மாணவர்கள் அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்தார். இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies