Type Here to Get Search Results !

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம். – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


தருமபுரி, ஏப்ரல். 11:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23, 2026 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க வரும் சிறப்பு வாக்காளர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வையற்றோர், உடல் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத நிலையில் உள்ள வாக்காளர்கள் தடையின்றி வாக்களிக்கச் செய்வதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


இந்த வசதி மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து, மக்களாட்சியை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies