தருமபுரி – ஏப்ரல் 11:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மேற்கொண்ட சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10.04.2026 மாலை 6.00 மணி முதல் 11.04.2026 மாலை 6.00 மணி வரை நடைபெற்ற சோதனையில், மொத்தம் 1 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி வாரியான விவரம்:
- பாப்பிரெட்டிப்பட்டி (60)
- வழக்குகள்: 1
- ரொக்கப்பணம்: ₹50,000
- மொத்தம்: ₹50,000
- பாலக்கோடு (57), பென்னாகரம் (58), தருமபுரி (59), அரூர் (61 – தனி)
- பறிமுதல்: இல்லை
மொத்த நிலவரம்:
- வழக்குகள்: 1
- ரொக்கப்பணம்: ₹50,000
- மொத்த பறிமுதல்: ₹50,000
தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)