Type Here to Get Search Results !

காரிமங்கலம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு; விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக உறுதி.


பாலக்கோடு – ஏப்ரல் 09:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணாமலைஅள்ளி புதூர், அந்தேரிகாடு, கலைஞர் நகர், எலுமிச்சனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.


இந்த பிரச்சாரத்தின் போது தொகுதி பார்வையாளர் டி. அரியப்பன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.வி.டி. கோபால் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை அமைப்பு, சமுதாயக்கூடம் கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.


இதற்கு பதிலளித்த வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பொதுமக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், அலியாளம்–தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய் திட்டம், ஜெகர்த்தலாவ்–புலிகரை கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூர்–தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய் திட்டம் போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies