தருமபுரி – ஏப்ரல் 09:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மேற்கொண்ட தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.1,50,100 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 08.04.2026 மாலை 6.00 மணி முதல் 09.04.2026 மாலை 6.00 மணி வரை நடைபெற்ற சோதனையில், மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியான விவரம்:
- பென்னாகரம் (58)
- ரொக்கப்பணம்: ₹1,46,500
- வழக்குகள்: 1
- அரூர் (61 – தனி)
- மதுபானம்: 20 பாட்டில்கள் (₹3,600 மதிப்பு)
- வழக்குகள்: 1
- பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி
- பறிமுதல்: இல்லை
மொத்த நிலவரம்:
- வழக்குகள்: 2
- ரொக்கப்பணம்: ₹1,46,500
- மதுபானம்: ₹3,600
- மொத்தம்: ₹1,50,100
தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

