Type Here to Get Search Results !

மாட்லாம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்த தகவல் அளிக்க கோரிக்கை.


காரிமங்கலம், ஏப்ரல். 01:


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 29.03.2026 அதிகாலை சுமார் 04.00 மணியளவில், கிருஷ்ணகிரி–தருமபுரி தேசிய நெடுஞ்சாலை (NH-44) மாட்லாம்பட்டி பிரிவு சாலை, ஐயங்கார் பேக்கரி எதிரில் விபத்து ஒன்று ஏற்பட்டது.


சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி நோக்கி வந்த ஆம்னி பேருந்து மோதியதில் அவர் கடுமையாக காயமடைந்தார்.


சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், அதே நாளான 29.03.2026 காலை சுமார் 11.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டறியப்படவில்லை. ஆகையால், இவரை பற்றிய தகவல் யாருக்காவது தெரிந்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


தொடர்பு எண்கள்:
📞 காவல் ஆய்வாளர் – 9498177803
📞 காரிமங்கலம் காவல் நிலையம் – 9498101081


இறந்த நபரின் புகைப்படம் தொடர்புடைய அதிகாரிகளிடம் உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies