தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் இளம் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
பயிற்சி வகுப்பில் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு, சமூக பங்களிப்பு மற்றும் பொதுப்பிரச்சினைகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், தருமபுரி சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட அளவிலான பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் பத்ரி, செல்வா, சிந்தன், பகத்சிங், முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா, மாவட்ட செயலாளர் சிசுபாலன், வட்ட செயலாளர் கார்ல்மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

