Type Here to Get Search Results !

மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும் பேருந்துகள்.


தருமபுரி, மே.23:


தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட தொடங்கியுள்ளதால் பொதுமக்களும் வணிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தருமபுரி புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. இதனால் பழைய புறநகர் பேருந்து நிலையம் பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்ததாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.


இந்நிலையில், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் மீண்டும் பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் நான்கு ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையம் வழியாக ஒகேனக்கல் சென்று வருகின்றன. அதேபோல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால், பழைய புறநகர் பேருந்து நிலைய வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies