பாலக்கோடு, மே.18:
தருமபுரி மாவட்டத்தில் 21.05.2026 அன்று நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், வெள்ளிச்சந்தை 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிர்வாக காரணங்களால் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)