Type Here to Get Search Results !

பாலக்கோடில் கேட்பாரற்று நின்றிருந்த 5 பைக்குகள் போலீசார் பறிமுதல்.


பாலக்கோடு, மே.21:
 


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கேட்பாரற்று நின்றிருந்த 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்கோடு காவல் நிலைய எஸ்.ஐ. சரவணக்குமார் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தக்காளி மார்க்கெட் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் பதிவெண் இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக 5 பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டவையா? அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies