பாப்பிரெட்டிப்பட்டி – ஏப்ரல் 01:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் 31.03.2026 காலை 6.00 மணி முதல் 01.04.2026 காலை 6.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் மொத்தம் ₹2,50,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
- பாப்பிரெட்டிப்பட்டி (60) தொகுதியில் ₹2,50,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளான பாலக்கோடு (57), பென்னாகரம் (58), தருமபுரி (59), ஹரூர் (61) ஆகிய இடங்களில் எந்தவொரு பணமோ அல்லது பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.
மேலும்,
- மதுபானம்
- போதைப்பொருட்கள்
- மதிப்புள்ள உலோகங்கள்
- இலவசப் பொருட்கள்
எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், இந்த காலப்பகுதியில் எந்த FIR-மும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஒழுங்குமுறை விதிகளை உறுதியாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

