தருமபுரி – ஏப்ரல் 01:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறிஞ்சி கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் எரிவாயு விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (01.04.2026) மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:
- தருமபுரி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி–கல்லூரி விடுதிகள் மற்றும் காலை உணவுத் திட்டங்களுக்கு தேவையான வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
- உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிக எரிவாயு உருளைகள், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் மூலம் 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், 03.04.2026 முதல் அதிகரிக்கப்பட்ட விநியோகம் நடைமுறைக்கு வரும்.
புகார் எண்கள்: 04342-233299, 94450 00216
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. பி.கே. கோவிந்தன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மரு. கைலாஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

